Sunday, February 1, 2026

பட்டுக் “கோட்டை”யை பிடிக்க போவது யார்? தயார் நிலையில் அதிரை எக்ஸ்பிரஸ்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 25 சுற்றுகளாக நடைபெற உள்ளது. இன்று காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கு எண்ணிக்கையை கடந்த 2016ம் ஆண்டு தேர்தலை போல் பிரத்யேகமாகவும் துல்லியமாகவும் வழங்க அதிரை எக்ஸ்பிரஸ் தயார்நிலையில் உள்ளது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கா.அண்ணாதுரை, அதிமுக சார்பில் என்.ஆர்.ரெங்கராஜன், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ்.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவர் சதாசிவம் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் 71.75சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்டுக் “கோட்டை”யை பிடிக்க போவது யார்?

இணைந்திருங்கள்… www.adiraixpress.com

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

பட்டுக்கோட்டை: ஸ்ரீமான் நாடிமுத்து திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் TRB...

பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை...
spot_imgspot_imgspot_imgspot_img