Sunday, February 1, 2026

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை திமுக கூட்டணி 152 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 81 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ‘ஐட்ரீம்’ மூர்த்தியிடம் தோல்வியடைந்தார். ‘ஐட்ரீம்’ மூர்த்தி 49 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஜெயக்குமார் 30 ஆயிரத்து 61 வாக்குகளே பெற்றிருந்தார். இதன்மூலம் 5 முறை ராயபுரத்தில் எம்எல்ஏ-வாக இருந்த ஜெயக்குமாரை வீழ்த்தி திமுக வேட்பாளர் ‘ஐட்ரீம்’ மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

பட்டுக்கோட்டை: ஸ்ரீமான் நாடிமுத்து திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் TRB...

பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img