Sunday, February 1, 2026

‘நாளை எம்எல்ஏ-க்கள் கூட்டம் ; ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா’ – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று வெளியானது. திமுக கூட்டணி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக அரியணையில் அமரப்போகிறது. காலை முதலே திமுக முன்னணியில் இருந்தது.

தேர்தல் வெற்றி முடிவுகள் தெரிந்த உடன் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் அறிவாலயத்தில் கூடினர். கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையிலும் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் தனது வெற்றிச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் வெற்றிச்சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் திமுகவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அப்போது மு.க. ஸ்டாலினிடம் பதவியேற்பு விழா எங்கே எப்போது நடைபெறும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மு.க ஸ்டாலின், இன்னும் முழுமையாக சில தொகுதிகளில் வெற்றி நிலவரம் வராததால் வந்தவுடன் பதவியேற்பு இருக்கும் என்றார்.

செவ்வாய்கிழமையன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா ஆடம்பர விழாவாக இல்லாமல் மிகவும் எளிமையாகவே இருக்கும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையிலேயே தனது பதவியேற்பு விழா நடைபெறும்.

பதவியேற்பு விழாவிற்கான தேதியை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்றார். தேசிய தலைவர்களின் அறிவுரை கேட்டு செயல்படுவேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

பட்டுக்கோட்டை: ஸ்ரீமான் நாடிமுத்து திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் TRB...

பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை...
spot_imgspot_imgspot_imgspot_img