Sunday, February 1, 2026

கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா தொற்று பரவல் கர்நாடகாவில் மிகவும் உச்சமடைந்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடாகவில் இன்று ஒரே நாளில் 48,781 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 592 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். 28623 பேர் கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் குணமாகி உள்ளனர்.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் உச்சம் பெற்று வருவதால் முழு லாக்டவுன் அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.

அனைத்து ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், பார்கள் இயங்கக்கூடாது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு பலனளிக்காததால் தற்காலிகமாக முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துளளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img