Saturday, September 13, 2025

பொறியியல் தேர்வெழுதிய அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை, கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளி வைத்தது. இதைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் இணைய வழியில் நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தேர்வு முடிவுகளை கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு, தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடாமல், நிறுத்திவைப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பான புகார் தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, முதல்வருடன் கலந்து பேசி விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கடந்த செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக பிப்ரவரி மாதம் நடந்த தேர்வுக்கு பதில் மறு தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “பிப்ரவரி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம். மறு தேர்வை தோல்வி அடைந்தவர்களுடன், வெற்றி பெற்றவர்களும் எழுதலாம். இதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. பழைய வினாத்தாள்கள் முறைப்படி, தேர்வனாது 3 மணி நேரம் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்படும். எதிர்வரும் ஏப்ரல்/மே 2021 செமஸ்டர் தேர்வுகளும் அதே முறையில் நடத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் வருகிற 25ஆம் தேதி முதல் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகளை அந்தந்த பல்கலைக்கழங்கள் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...
spot_imgspot_imgspot_imgspot_img