அதிரை அரிமா சங்கத்தின் சாசன உறுப்பினர் சி.சார்லஸ் அவர்களின் துணைவியார் ஜான்சி அவர்கள் (26.05.2021) வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் அதிரை பெரிய தைக்கால் தெருவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றோம். அன்னாரின் இறுதி சடங்கு இன்று மாலை
3 மணி அளவில் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள கல்லறையில் நடைபெறும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு அதிரை லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





