Sunday, March 22, 2026

அதிரை : சி.ஏ.ஏவிற்கு எதிராக நாடு தழுவிய இணைவழி போராட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரியளாவில் ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்களில் ஈடுபட்டு எதிர்ப்பினை தெரிவித்துவந்தனர். இதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம் CAA , NRC ,NPR சட்டங்களை அமல்படுத்த முயற்சித்து வந்தது.

இதனையடுத்து இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்திய அரசு. குஜராத் சத்தீஸ்கார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசு எதிராக நாளை ஜூன் 1 அன்று நாடு தழுவிய இணைவழி போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைமை அழைப்புவிடுத்துள்ளது.

அதன்படி , தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை நடைபெறும் இணைவழி போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர நிர்வாகிகள் , உறுப்பினர்கள் , பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இணைவழி போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img