Sunday, February 1, 2026

பிலால் நகர் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவியவர்களுக்கு பிலால் நகர் ஜமாஅத்தார்கள் நன்றி

spot_imgspot_imgspot_imgspot_img

மிகவும் பின்தங்கிய பகுதியான ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் 1வது வார்டு பகுதியில் பல வருட காத்திருப்புகளுக்குப் பின் முதற்கட்டமாக அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை,
350 மீட்டர் தார்சாலை – 1
320 மீட்டர் தார்சாலை – 1
130 மீட்டர் சிமென்ட் சாலை – 1
125 மீட்டர் சிமென்ட் சாலை – 1
550 மீட்டர் கழிவுநீர் கால்வாய் – 1
295 மீட்டர் கழிவுநீர் கால்வாய் – 1
என பணிகள் துவங்கி படிப்படியாக நிறைவுற்று வருகின்றன.

இப்பணிகள் யாவும் நிறைவுற்றிட ஏதுவாக பரிந்துரை செய்தவர்கள், நிதி ஒதுக்கீடு செய்தவர்கள், ஒப்புதல் வழங்கியவர்கள், திட்டம் தயாரித்தவர்கள், கோரிக்கை வைத்தவர்கள் என அனைவருக்கும் நன்றி செலுத்திடுமுகமாக இன்று 1 வது வார்டு கவுன்சிலரும் பிலால் நகர் ஜமாஅத் செயலாளருமான கமாலுதீன் அவர்கள் தலைமையில் பிலால் நகர் ஜமாஅத் தலைவர் முஹமது அமீன், துணைத் தலைவர் பஷீர் அஹமது, பொருளாளர் (பொறுப்பு) நிஜாஸ் அஹமது, பிலால் பள்ளி நிர்வாகி அஸார் மற்றும் தெரு முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் சூழ பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.கா.அண்ணாதுரை அவர்களுக்கும், பட்டுக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் திரு. T. பழனிவேலு அவர்களுக்கும், ஒன்றிய பிரதிநிதி திரு. N. சுரேஷ் அவர்களுக்கும், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் திரு. S. சக்தி அவர்களுக்கும், ஊராட்சி மன்ற செயலாளர் திருமதி. கலா அவர்களுக்கும் நன்றி தெரிவித்து பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டதுடன் புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் தருமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img