Saturday, September 13, 2025

கூகுள்(Playstore) வெளியிட்ட அவசர அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஆண்ட்ராய்டு பயனர்கள் உஷார், கூகிள் நிறுவனம் சமீபத்தில் அதன் கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து 8 ஆபத்தான மால்வேர் ஆப்ஸ்களை நீக்கம் செய்துள்ளது. இந்த 8 ஆபத்தான ஆப்ஸ்களும் கிரிப்டோகரன்சி உடன் தொடர்புடையது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆபத்தான ஆப்ஸ்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் தீங்கு விளைவிக்கக்கூடியவை, மற்றும் உங்கள் பணத்தைச் சுரண்டக்கூடியவை என்பதால் கவனமுடன் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான 8 ஆப்ஸ்களை அடையாளம் கண்ட பாதுகாப்பு நிறுவனம்
பிட் ஃபண்ட்ஸ், பிட்காயின் மைனர், பிட்காயின், பிட்காயின் (BTC) போன்ற பல ஆப்ஸ்களை உள்ளடக்கிய 8 ஆபத்தான செயலிகளைக் கூகிள் நிறுவனம் தற்போது அதன் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து தடை செய்துள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக இந்த ஆப்ஸ்களை தனது பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து நிறுவனம் நீக்கம் செய்வதற்கு முன்பாகவே ஏராளமான பயனர்கள் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கிரிப்டோகரன்சி சுரங்கம் மூலம் மக்களை ஏமாற்றும் ஹேக்கர்கள்
இதனால் கூகிள் நிறுவனம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தும் இந்த ஆபத்தான ஆப்ஸ்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாகக் கடந்த இரண்டு மாதங்களில் கிரிப்டோகரன்சி சுரங்கம் என்பது அனைவரின் ஆர்வத்தையும் பெற்று வருகிறது. இருப்பினும், ஹேக்கர்கள் இந்த பொது ஆர்வத்தை தங்களுக்குச் சாதகமாக்கி, போலி கிரிப்டோகரன்ஸி தளத்தைப் பயன்படுத்தி அப்பாவி நெட்டிசன்களை ஏமாற்றி வருகின்றனர்

இணையதளத்தில் ஏராளமான போலி மால்வேர் ஆப்ஸ்கள்
ஹேக்கர்களின் முயற்சியால் இப்போது ஏராளமான போலி மால்வேர் ஆப்ஸ்கள் இணையதளத்தில் உலவுகிறது. உங்கள் ஸ்மார்ட்போன்களில் அபாயகரமான தீம்பொருள் மற்றும் ஆட்வேர் கொண்ட தீங்கிழைக்கும் செயலிகளை நிறுவி ஹேக்கர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர். இதில் சில ஆப்ஸ்கள் உங்களிடமிருந்து பணத்தையும் சுரண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மாதிரியான போலி ஆப்ஸ்களை எப்படி அடையாளம் காண்பது என்ற டிப்ஸையும் வழங்கியுள்ளோம்.

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தற்போது 8 ஆப்ஸ் நீக்கம்
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த தீங்கிழைக்கும் போலி மால்வேர்ஆப்ஸ்களை கூகிள் அடையாளம் கண்டு, அவற்றை அதன் கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து அகற்றிவிட்டது. உண்மையில், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தற்போது 8 ஆபத்தான ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளன, இவை அனைத்தும் கிரிப்டோகரன்சி சுரங்க பயன்பாடுகளாக மறைக்கப்பட்ட மால்வேர்களுடன் இயங்கிக்கொண்டிருப்பதைப் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூகிளுக்கு அடையாளம் காட்டியுள்ளது.

கிரிப்டோ கரன்சி கிளவுட் மைனிங் மூலம் பயனர்களின் பணம் திருட்டு
கிரிப்டோ கரன்சி கிளவுட் மைனிங் செயல்பாடுகளில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் பெரிய லாபம் சம்பாதிக்கலாம் என்ற வாக்குறுதிகளால் பயனர்களை ஹேக்கர்கள் ஈர்க்கின்றனர். பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ, இந்த எட்டு தீங்கிழைக்கும் செயலிகள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி விளம்பரங்களைப் பார்க்க வைப்பது, மாதாந்திர கட்டணமாக $ 15 (ரூ. 1,115) கொண்ட சந்தா சேவைகளுக்குப் பணம் வசூலிப்பது, மற்றும் எதையும் பெறாமல் அதிகரித்த சுரங்க திறன்களுக்குப் பணம் செலுத்துவது போன்ற செயலை செய்கிறது.

Google நிறுவனம் உடனே செய்த அவசர நடவடிக்கை
பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் தனது கண்டுபிடிப்புகளை Google Play நிறுவனத்திற்குத் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து கூகிள் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றை நீக்கம் செய்தது. முக்கிய விஷயம் என்னவென்றால், கூகிள் அவற்றை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியிருக்கலாம், ஆனால் இந்த பயன்பாடுகள் ஏற்கனவே உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் போனைச் சோதனை செய்து விரைவாக இவற்றை நீக்குவதுதான்.

பிளே ஸ்டோரிலிருந்து கூகிள் நீக்கிய 8 தீங்கிழைக்கும் ஆப்ஸ்களின் பட்டியல் இதோ
BitFunds – Crypto Cloud Mining
Bitcoin Miner – Cloud Mining
Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet
Crypto Holic – Bitcoin Cloud Mining
Daily Bitcoin Rewards – Cloud Based Mining System
Bitcoin 2021
MineBit Pro – Crypto Cloud Mining & BTC miner
Ethereum (ETH) – Pool Mining Cloud

கட்டண சந்தாவுடன் பயனர்களை ஏமாற்றும் ஆப்ஸ்கள்
இந்த பயன்பாடுகள் பயனர்களுக்குக் கட்டண சந்தாவுடன் வாங்க வேண்டிய கட்டண பயன்பாடுகளாக வருகிறது என்று ஆராய்ச்சி தளம் கூறுகிறது. கிரிப்டோ ஹோலிக் – பிட்காயின் கிளவுட் மைனிங்கைப் பதிவிறக்கப் பயனர்கள் $ 12.99 ( ₹ 966 தோராயமாக) செலுத்த வேண்டியிருந்தாலும், அவர்கள் தினசரி பிட்காயின் வெகுமதிகளைப் பதிவிறக்க $ 5.99 ( ₹ 445 தோராயமாக) செலுத்த வேண்டியிருந்தது என்று நிறுவனம் கூறியுள்ளது. கிளவுட் அடிப்படையிலான சுரங்க அமைப்பை வழங்குவதாகப் பயனர்களை ஏமாற்றம் செய்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல்...

மனித உடலில் உயிர் உள்ள வரை தான் நம்மால் இயங்க முடியும் உயிர் போன பிறகு யாருக்கும் எந்த பயனும் இல்லாதவகையில் நாம்...

இலவச டேட்டா, உங்க வங்கி கணக்கிற்கு டாட்டா… எச்சரிக்கை.

கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. 50...

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது. மேலும் அந்த...
spot_imgspot_imgspot_imgspot_img