Saturday, September 13, 2025

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 91 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 91 வது மாதாந்திர கூட்டம்   நிகழ்ச்சி தகவல்கள்  

 தேதி:10/09/2021                                             

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 91-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 நிகழ்ச்சி நிரல்:-

கிராஅத்                 : சகோ. ஜம்சித் அகமது  ( இணை பொருளாளர் )

முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை            : சகோ. நெய்னா  முகமது ( ஒருங்கிணைப்பாளர் )

சிறப்புரை              :  A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )

அறிக்கை வாசித்தல்  :  சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )

நன்றியுரை           : சகோ. ரியாஸ் அஹமது ( உறுப்பினர் ) 

தீர்மானங்கள்:

 1) நமது தலைமையகத்தின் மூலம் செயல்முறைபடுத்தி வரும் நகைக்கடன் திரும்ப பெறுவதின் சிரமங்கள் விசயமாக இக்கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான ஒரு எளியமுறையை 6 மாத காலம் நிறைவடைந்த நபர்களிடம் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் வசூலித்து அதன் சுமையை குறைப்பதற்கான வழிமுறையை தலைமையகத்திற்கு ஒரு ஆலோசனையாக முன் எடுத்துச் செல்லப்பட்டது இதன் மூலம் பயனாளிகளுக்கும் தலைமையகத்திற்கும் சிரமமின்றி இலகுவாக இத்திட்டத்தினை முன் எடுத்துச் செல்லலாம் என வளியுறுத்தப்பட்டு அதற்கான தகவல் தலைமையகத்திடம் முன் வைக்கப்பட்டுள்ளது.

 2) அல்ஹம்துலில்லாஹ் இவ்வருடம் குர்பானித் திடத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் வாய்க்கால் தெரு பள்ளி கூட்டத்திற்கு Rs.25000/- தொகை கொடுத்து உதவியதின் மூலம் நமதூர் பெண்களின் கல்வி ஞாணமும் தரமும் உயரும் வண்ணம் அமைவதாகவும் இது போன்று நமதூர் கல்வி சம்பத்தப்பட்ட அனைத்து ஸ்தாபனங்களுக்கும் தேவையின் முக்கியத்துவத்தை அறிந்து உதவி வந்தால் நமதூர் பல கல்வியாளர்களை உருவாக்கி நமதூர் சிறப்படைய வாய்ப்பாக அமையும் என இக்கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

3) கடந்த மாத நிகழ்வுகளான : இலவச தையல் மிஷின் சுதந்திர தின விழாவில் கொடியேற்றம், இமாம்களுக்கான தமிழக அரசின் உதவி திட்டத்திற்கான  பதிவுகளுக்கு உதவியது மற்றும் பென்ஷன் பெறும் விதவைகளுக்கு கூடுதலாக உணவுகள் வழங்கப்பட்டது போன்ற சிறப்பான சேவைகள் தொடர்ச்சியாக செய்து மேலும் நமதூர் ஏழை மக்களின் முன்னேற்றம் அடைய அறிய திட்டங்களை இனி வரும் காலங்களில் செயல்படுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) தினசரி சேமிப்பு திட்டம்: ஒரு நல்ல ஒரு திட்டம் இதன் மூலம் நமதூர் மாணவர்களும் பெரியோர்களும் அதிகம் பயனடைய வாய்ப்பாக இருக்கும் இதனை கொண்டு நமது நகை கடன் திட்டம் சுமை குறைய வாய்ப்பாக அமையும் ஆகவே ABM யாதொரு சிரமங்களையும் பொருட்படுத்தாது கூடுதல் பணியார்களை நியமித்து இத்திட்டத்தை செயல்படுத்தினால் வருங்கால சந்ததியினருக்கு பெரும் உதவியாக அமைவதுடன் இதன் மூலம் வட்டி தொழில் செய்பவர்களை குறைக்க முடியும். ஆகவே முடிந்தால் இதனை வருங்காலங்களில் அமல்படுத்தினால் இன்னும் சிறப்பாக ABM செயல்பட உறுதுணையாக அமையும் என்பதனை இக்கூட்டத்தில் தெளிவுப்படுத்தப்பட்டது. அத்துடன் இளைஞர்கள், மாணவர்களின் தொடர்பினை ABM-உடன் அதிகப்படுத்தி கொள்ள வாய்ப்பாக அமையும்.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த 92-வது அமர்வு OCTOBER மாதம் 08-தேதி வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img