தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட மனித நேய மக்கள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் MH ஜவாஹிருல்லாஹ் அதிரை எக்ஸ்பிரஸிற்கு பேட்டி அளித்தார். அப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து நெரியாளர் ஹசன் வகா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜவாஹிருல்லாஹ், பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலையுடன் 10ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறை கைதிகளையும் விடுதலை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். இதனிடையே தேசத்துரோகம் மற்றும் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தவிர 700 கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சமீபத்தில் தமிழக சட்ட துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தது குறித்து ஜவாஹிருல்லாஹிடம் நெறியாளர் ஹசன் வகா வினாக்களை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த ஜவாஹிருல்லாஹ், சட்டத்துறை அமைச்சரே குழப்பத்தில் இருக்கிறார் என்றும், சிறை வாசிகள் விடுதலை விவகாரத்தில் முதல்வரே முடிவெடுப்பார் என்றும் கூறினார். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழக சட்டத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என காட்டமாக தெரிவித்தார்.
முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை : முதல்வரின் முடிவுக்கு முரண்படும் சட்ட அமைச்சர்! ஜவாஹிருல்லாஹ் காட்டம்!!
More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z





