தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலாளரும், அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னால் மாணவருமான முனைவர் ஹாஜா கனி நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அதிராம்பட்டினம் வந்தார்.
முன்னதாக அதிரை வந்த ஹாஜா கனியை நகர தமுமுக, மமக நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் அதிராம்பட்டினத்தில் அரசியல், சமூக தொண்டில் அக்கரை செலுத்திய ஆளுமைகளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அதில் நகர முஸ்லீம் லீக்கின் முன்னால் தலைவர் டாக்டர் முஹம்மது சாலீஹ் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து பரஸ்பரம் வாழ்த்துக்களை பெற்றனர்.
இதேபோல் பாரம்பரியமிக்க அரசியல் குடும்ப பின்னனியை கொண்ட MMS குடும்பத்தினரை சந்தித்த ஹாஜா கனி எப்போதெல்லாம் அதிராம்பட்டினம் வருகிறேனோ அப்போதெல்லாம் மறைந்த சாச்சா அப்துல் வகாப் அவர்களின் வரவேற்பில் நெகிழ்ந்து போவேன் என்றும்.
அவர் பேரூர் மன்ற தலைவராக இருந்த காலத்தில் கூட இந்திய அரசியலை நன்கு பேச கூடிய நன்மகனார் என்றார்.
அவர் விட்டுச்சென்ற அரசியல் பணியை வாரிசுகள் எடுத்து நடத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.













