Saturday, September 13, 2025

MMS அதிரையின் ஆளுமை – 60 ஆண்டு கால வரலாறு தொடரும்…

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒரு குடும்பத்தினரின் ஆளுமையை விவரிக்கிறது இந்த இந்த செய்தி.

பாரம்பரிய மிக்க குடும்ப பின்னணியை கொண்ட MMS குடும்பத்தினர் அரசியலில் காலூன்றி சமூகத்தில் நல்ல உயரவை அடைந்துள்ளனர்.

குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை இக்குடும்பத்தின் ஆதிக்கம் அளப்பரியது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் கூட இக்குடும்பத்தின் வியூகம் வென்றுள்ளது எனலாம்.

மமீசெ வகையராக்கள் அதிரையை ஆண்ட வருடமும், பெயரும். 1963 முதல் 1967 வரை MMS சேக்தாவூது மரைக்காயர். 1967 முதல் 1971 வரை சிட்டிங் தலைவராக MMS சேக்தாவூது மரைகாயரே இருந்துள்ளார்.

மீண்டும் அவரே 1971 முதல் 1973 மற்றும் 1975லிருந்து 1979 வரை MMS சுல்தான் அப்துல் காதரே பதவி வகித்து வந்துள்ளார்.

இதுதவிர 1986 MMS சுல்தான் அப்துல் காதரும்,1996லிருந்து 2001 மீண்டும் 2001 முதல் 2006 வரை தற்போது தேர்வாகியுள்ள MMS தாஹிரா அம்மாளே பதவி வகித்து வந்துள்ளார்.

அதன்பின் சாச்சா என்றழைக்கப்படும் MMS அப்துல் வகாப் அவர்கள் 2006 முதல் 2011 வரை அதிரை நகர பேரூர் மன்ற தலைவராக இருந்து வந்தார். ஒட்டுமொத்த அதிரை வரலாற்றில் திரும்பி பார்க்கும் அளவிற்கு தமது குடும்பம் இந்த நகரை கட்டுக்குள் வைத்திருந்தன என்றும், மீண்டும் எங்கள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறதாக அக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்தோங்கி நகரின் வளர்சிக்கு முக்கியத்தும் அளிக்க உள்ளதாக 9வது முறையாக தேர்வாகியுள்ள MMS குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img