முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளருமான S.H.அஸ்லத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் அதிரையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தன் மீது அவதூறு பிரச்சாரம் செய்யும் வகையில் போஸ்டர் ஒட்டிய சமூக விரோதிகளை கைது செய்யுமாறு அதிரை காவல் நிலையத்தில் S.H.அஸ்லம் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதுடன் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கும் அவர், அவதூறு போஸ்டர் ஒட்டிய விஷமிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...





