Wednesday, March 18, 2026

ரமலான் மாதத்தில் இஸ்லாமிய கேள்விகளுக்கு பதில்களை சொல்லுங்க! தங்கம், வெள்ளி நாணயங்களை அள்ளுங்க!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு போட்டியில் மொத்தம் 209 பேர் கலந்துக்கொண்டனர். இதில் முதல் பரிசாக வழங்கப்பட்ட தங்க நாணயத்தை அதிரை ஜெ. அஸ்ரா பர்வீன், இரண்டாம் பரிசை கூத்தாநல்லூரை சேர்ந்த அ.ருக்சானா ஆகியோர் தட்டிச்சென்றனர். இவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் பாராட்டு கடிதத்தை மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது வழங்கி பாராட்டினார். இதேபோல் 104 பேருக்கு சான்றிதழ் மற்றும் ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் 2022ம் ஆண்டு ரமலான் மாதத்திலும் அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் பட்டுக்கோட்டை நவரத்தினா தங்க மாளிகை இணைந்து இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் பரிசு தங்க நாணயமும் 2 மற்றும் 3ம் பரிசாக வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல் தொடர்ச்சியாக பங்கேற்போருக்கு ஊக்க பரிசுகளும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டு ரமலான் பிறை 01 முதல் பிறை 20 வரை இஸ்லாமிய மார்க்க அறிவு போட்டி நடத்தப்படும். சரியான விடையை தேர்வு செய்யும் முறையில் நடைபெறும் இந்த போட்டியின் விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img