Friday, March 20, 2026

சைக்கிளில் லடாக் சென்றடைந்த அதிரை இளைஞர்கள்! ஒருவர் மட்டும் நேபாளம் செல்ல திட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையை சார்ந்த அப்துல் ஹமீது (25) மற்றும் முகம்மது ஃபாய்ஸ் (18) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் செல்வதற்கான தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர். செல்கின்ற வழிகளில் அப்பகுதி மக்களின் கலாச்சாரம், மக்களின் பழக்கவழக்கங்கள் குறித்தும் தெரிந்துக்கொண்ட இவர்கள், 55 நாட்களில் சுமார் 3ஆயிரத்து 500 கிலோ மீட்டரை கடந்து லடாக் யூனியன் பிரதேசத்தை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், முகம்மது ஃபாய்ஸ் மட்டும் வேறொரு குழுவினருடன் இணைந்து நேபாளம் செல்ல இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி அப்துல் ஹமீது மீண்டும் அதிரை திரும்புகிறார். மிகவும் இளம் வயதில் சவால் மிகுந்த சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கும் அப்துல் ஹமீது மற்றும் முகம்மது ஃபாய்ஸ் ஆகியோருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img