அதிரையின் விரிவாக்க பகுதியாக கருதப்படும் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட சாணாவயல் மற்றும் சவுக்குகொல்லை பகுதியில் இதுநாள் வரை முறையான சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து மேலத்தெருவை சார்ந்த என்.ஏ.முகம்மது யூசுப் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையின் பரிந்துரையுடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார். இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மந்தப்பட்ட அலுவலர் உறுதி அளித்திருப்பதாக யூசுப் கூறினார். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்ய உறுதுணையாக இருந்த தஞ்சை திமுக தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் மற்றும் ஏரிபுரக்கரை கவுன்சிலர் சுரேஷ் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அதிரை சாணாவயலில் சாலை, கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துக! பரிந்துரை செய்தார் எம்.எல்.ஏ!!
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





