Monday, February 2, 2026

அனைத்து தரப்பையும் அரவணைத்து செல்வோம்! தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பேச்சு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ, சார்பு அணிகளுக்கான மாவட்ட, ஒன்றிய, நகர அமைப்பாளர்கள் நியமனத்தின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசினார். அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலி நாளிதழின் சந்தா சேர்க்கையை அதிகப்படுத்த வலியுறுத்தினார். இதனிடையே செயற்குழு கூட்டத்தில் நகர, ஒன்றிய செயலாளர்கள் தெரிவித்த கருத்துக்களையும் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி மாநில துணை தலைவர் பழஞ்சூர் செல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img