Sunday, February 1, 2026

கோவை: ஆதிதிராவிடர் வீட்டில் பீச்சாங்கையில் சாப்பிட்ட பிஜேபி நட்டா- முகம் சுழித்த கிராம மக்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தி, விஜயா தம்பதியினரின் வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உணவருந்தினார்.

நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்த மூர்த்தி- விஜயா தம்பதியினர் வீட்டில்தான் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தகவல் தொலைதொடர்பு இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மூர்த்தி வீட்டுக்கு வந்தனர்.

அப்போது அவர்களை கிராம மக்கள் பூ தூவி வரவேற்றனர். மூர்த்தி மற்றும் விஜயா தம்பதியினரின் வீட்டுக்குள் தலைவர்கள் சென்றநிலையில், வீட்டின் உரிமையாளர்களான மூர்த்தி- விஜயா தம்பதியினரையே பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டுக்குள் அனுமதிக்காமால் நிறுத்திவைத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

அதன்பின் உள்ளே அமர்ந்த தலைவர்கள் வீட்டு உரிமையாளர் எங்கே என்று கேட்ட பிறகு அதன் பிறகு அந்த தம்பதியினரையும் அவரது மகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர். அதன்பிறகு தலைவர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். வந்த தலைவர்கள் யார் என்று தெரியாத நிலையில் அவர்களுக்கு மூர்த்தி- விஜயா தம்பதியினர்,

தாங்கள் சமைத்த உணவுகளை எடுத்துவந்தனர். ஆனால் அவர்களை பரிமாற விடவில்லை. தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் உணவு வகைகளை பரிமாறினார். அப்போது பாஜக தலைவர் ஜே பி நட்டா இடது கையில் உணவு சாப்பிட்டது முகம் சுளிக்க வைத்தது. மேலும் பருப்பு, வடை, பாசிப்பயிறு, கருப்பு சுண்டல், பஜ்ஜி உள்ளிட்ட ஆறு வகை உணவுகளை வைத்து இருந்த போதும், இரண்டு வகைகளை மட்டுமே நட்டா ருசி பார்த்தார். மீதியை தட்டில் விட்டு வைத்து விட்டனர். ஆதிதிராவிடர் வீட்டில் சாப்பிட வந்துவிட்டு, பெயருக்கு மட்டும் சுவைத்து விட்டு வைத்தது கிராம மக்களை அதிருப்தி அடைய வைத்தது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img