Wednesday, March 18, 2026

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரணத்தில் மர்மம் – 5 பேரிடம் விசாரணையை முடுக்கியது காவல்துறை.

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்தார். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் திமுக முன்னாள் எம்.பி.யும் மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் துணைத் தலைவராகவும் இருந்த மஸ்தான் மரண வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவரது மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img