Wednesday, March 18, 2026

அதிராம்பட்டினம் தாலுகா! எம்.எல்.ஏ-யிடம் நேரில் வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டிலேயே அதிக கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக திகழும் பட்டுக்கோட்டையை இரண்டாக பிரித்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு தாலுகா அமையும் பட்சத்தில் விவசாயிகள், மீனவர்கள், அடித்தட்டு மக்கள் உள்ளிட்டோர் அரசின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை எளிதில் பெறுவதுடன் காவிரி கடைமடை கிராமங்களும் மேம்படும். இந்நிலையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்று எம்.எம்.எஸ் அப்துல் கறீம் தலைமையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையை சந்தித்து அதிராம்பட்டினம் தாலுகாவை விரைவாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பின்போது அனைத்து முஹல்லா தலைவர் PMK.தாஜுதீன், அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், NKS. சரீஃப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img