Wednesday, March 18, 2026

ஈரோட்டில் முகாமிட்ட அதிரை அஸ்லம்! எம்.எல்.ஏ தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை தலைமையில் வர்த்தகர் அணி மாநில துணை தலைவர் பழஞ்சூர் செல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அங்கு முகாமிட்டு கை சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதனிடையே அமைச்சரும் திமுக பொதுச்செயாளருமான துரைமுருகன் பங்கேற்ற தேர்தல் பிரச்சார ஆலோசனை கூட்டத்திலும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img