Sunday, February 1, 2026

பிலால் நகருக்கு பிறக்குமா விடியல்?

spot_imgspot_imgspot_imgspot_img

ஏரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை சரி செய்ய கோரி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் மற்றும் 1வது வார்டு ஊராட்சிமன்ற உறுப்பினர் ஜாஸ்மின் கமாலுதீன் ஆகியோர் மின்சார வாரியத்திற்கு கடந்த ஆண்டு மனு அளித்தனர்,

பல மாதங்கள் உருண்டோடிய நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காணாத மின் வாரிய நிர்வாகத்தை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிகிழமை போராட்டத்தில் ஈடுபடபோவதாக சமூக ஆர்வலர்கள் அறிவித்தனர்.

இதனையடுத்து வியாழக்கிழமை பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர், அதிரை காவல் ஆய்வாளர், சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கமாலுதீன், கனி, சதாம், இமாமுதீன் ஆகியோரை பங்கேற்றனர்.

இதில் பேசிய உதவி மின் செயற்பொறியாளர், ஒரு வார காலத்திற்குள் மின் கம்பத்தை மாற்றுவதுடன் 3 மாதங்களில் புதிய மின் மாற்றி அமைத்து பிலால் நகரில் தடையில்லா மின்சாரம் உறுதி செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img