Monday, September 29, 2025

அதிரையில் பெண்களுக்கான இஸ்லாமிய பயிற்சி மைய பரிசளிப்பு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

அல்லாஹ்வின் பேரருளால் அதிராம்பட்டினம் பிலால் நகரில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) நடத்தி வரும் பெண்களுக்கான இஸ்லாமிய பயிற்சி மையத்தின் (ITC) 10 ஆம் ஆண்டு நிறைவு மற்றும் இஸ்லாமிய அறிவுப்போட்டிகள் பரிசளிப்பு விழா சீறோடும் சிறப்போடும் பெற்றோர்கள் மாணவிகளின் பேராதரவோடும் நேற்று வெள்ளியன்று மாலையில் இனிதே நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

மிகவும் பின்தங்கிய பகுதியான பிலால் நகரை மார்க்க ரீதியிலும் விழிப்புணர்வு பெற்ற பகுதியாக வார்த்தெடுக்க வேண்டும் என அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பால் இஸ்லாமிய பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்ற இந்த மக்தப் மதரஸாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இதுவரை பயின்று பயனடைந்து வெளியாகியுள்ளனர். மேலும் இந்த மையத்தில் பெண்களுக்கான வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சிகள், அவ்வப்போது ஆண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ரமலான் மாதம் முழுவதும் பெண்களுக்கான தொடர் சிறப்பு பயான்கள் என பல்வேறு நற்காரியங்கள் நடந்தேறி வருகின்றன, அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிலையில், 17.03.2023 வெள்ளியன்று மாலை 5 மணியளவில் மக்தப் மதரஸாவின் 10 ஆண்டு நிறைவு மற்றும் இஸ்லாமிய அறிவுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா அதிரை தாருத் தவ்ஹீதின் துணைத்தலைவர் ஜமாலுதீன் அவர்களின் தலைமையில் அவர்களின் துவக்கவுரையோடு துவங்கியது, அதிரை தாருத் தவ்ஹீதின் செயலாளர் ஜமீல் காக்கா, பொருளாளர் நிஜாமுதீன், இணை செயலாளர் முஹமது அமீன், உறுப்பினர்கள் சாந்தா சாகுல், அபூ அப்துல்லாஹ், அப்துல் கபூர், இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியை மக்தப் மதரஸாவின் முதன்மை ஆசிரியை ஜாஸ்மின் கமாலுதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர் நாச்சியார்கோயில் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “மதரஸா கல்வியின் அவசியம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
முன்பாக இம்மதரஸா மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, இக்ரா அல் குர்ஆன் (கிராஅத்), சூரா மனனம், துஆக்கள் மனனம் போன்றவை நடத்தப்பட்டு பெறுமதிமிக்க பரிசுகளுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மக்தப் மாணவிகள் அனைவருக்கும் குர்ஆன் கொண்டு செல்வதற்கான பேக் ஒன்றும் வழங்கப்பட்டதோடு போட்டிகளில் வெற்றி பெறாதவர்களுக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டனர், இம்மக்தபின் முன்னாள் இன்னாள் உஸ்தாதக்களும் கண்ணியப்படுத்தப்பட்டனர்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் இஸ்லாமிய பயிற்சி மையப் பொறுப்பாளர் கமாலுதீன் அவர்களும் அவரது மகன் ஜாஹிர் ஹுசைன் அவர்களும் மிகச்சிறப்பான ஏற்பாடுகளுடன் ஒருங்கிணைத்திருந்தனர், மேலும் சக உஸ்தாதாக்களின் அளப்பெரிய பங்களிப்பும் ஈடிணையற்றதாக அமைந்திருந்தது. இறுதியாக கஃபாரா துஆவுடன் சுமார் 9 மணியளவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்தன. அல்லாஹ் ஸ்பான்சர்கள் உள்ளிட்ட இந்நிகழ்வோடு தொடர்புடைய அனைவருக்கும் அருள் செய்வானாக!

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img