Saturday, September 13, 2025

என்னது அதிராம்பட்டினம் மதுரை மாவட்டமா? பகிர் கிளப்பும் நகராட்சி ஆவணம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றில் அதிகளவில் குளறுபடி நடப்பதாக சொல்லப்படுகிறது. மாட்டு சாணியின் மேல் வெள்ளை அடிப்பது, சாதாரன சாணி விழுந்ததற்கே புதிய தார்சாலை சேதமடைவது என சாணியால் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கும் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு தற்போது மற்றொரு புகழ் வந்துசேர்ந்திருக்கிறது. அதன்படி ரூ. 4.42கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்த புள்ளி ஆவணத்தின் 35வது பக்கத்தில் அதிராம்பட்டினத்தை மதுரை மாவட்டம் என குறிப்பிட்டு டெல்டாக்காரனை மதுரைக்காரனாக மாற்றியுள்ளனர் நகராட்சி அலுவலர்கள்.

அதிராம்பட்டினம் என்பது தஞ்சாவூர் மாவட்டம் என சிறு பிள்ளைகளுக்கு தெரிந்தது கூட அரசு பணியில் இருக்கும் நகராட்சி அலுவலர்களுக்கு தெரியாமல் போனது வியப்பாக உள்ளது. இந்த குளறுபடியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில் ரூ. 4.42கோடி மதிப்பிலான மெகா திட்டத்தின் தரம் மற்றும் மதிப்பீடு சரியானதா? அல்லது அதில் ஏதும் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்கிற சந்தேகமும் எழுகிறது.

கடந்த ஏப்ரலில் ரூ.28லட்சம் மதிப்பிலான கட்டிடம் கட்டும் பணிக்கான டெண்டரில் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் கையொப்பமிட வேண்டிய இடத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையான சூழலில் இந்தமுறை அதிராம்பட்டினம் மதுரை மாவட்டத்தில் இருப்பதாக நகராட்சி அலுவலர்கள் எழுதி இருப்பது அவர்களின் பணித்திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img