Home » அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!

0 comment

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தமிழக மின் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதில் நடந்த முறைகேடு, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கு தொடர்பாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் பங்களா, மந்தைவெளி பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்குமார் வீடு ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 8:30ல் துவங்கி நள்ளிரவு 1:30 மணி வரை என 18 மணி நேர சோதனையை நிறைவு செய்தனர்.

பின் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தி வருகின்றனர்

You Might Be Interested In

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter