Sunday, February 1, 2026

அதிரை SSMG கால்பந்து தொடர் : பாலு மெமோரியலிடம் வீழ்ந்தது ராயபுரம் 7s!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் நேற்று(07/07/2023) நடைபெற்ற இருபத்தொன்றாம் நாள் ஆட்டத்தில் ராயபுரம் 7s சென்னை அணியினரும் பாலு மெமோரியல் திருச்சி அணியினரும் மோதினர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய ராயபுரம் 7s சென்னை அணி, முதல் கோலை அடித்தது. பின்னர் சுதாரித்துக்கொண்ட பாலு மெமோரியல் திருச்சி அணி அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தியது. இதனையடுத்து பாலு மெமோரியல் திருச்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ராயபுரம் 7s சென்னை மாகாணம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்றும் நாளையும்(சனி, ஞாயிறு) ஆட்டங்கள் கிடையாது.

நாளை மறுதினம்(10/07/2023) திங்கட்கிழமை விளையாட வேண்டிய அணிகள் :

காலிறுதி ஆட்டம் 1 :

தென்னரசு FC பள்ளத்தூர் vs ESC அதிராம்பட்டினம்

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img