Monday, December 1, 2025

REALSTORY -19குரூப்பின் பொய்யான ஃபத்வாவால் பொங்கிய அதிரை குடும்பம் – பல லட்சம் ரூபாய் க்ளோஸ் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அன்சாரி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவர் (19குரூப்பில்) அஹ்லே குர்ஆன் எனும் கொள்கையில் பிடிப்புள்ளவராவர் தொழில் அதிபரான இவருக்கு சென்னையின் முக்கிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் இருந்துள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அஹ்லே குர்ஆன் எனும் வழிகெட்ட 19 அமைப்பின் மார்க்க தீர்ப்பு ஒன்றை அறிவித்தன,அதில் சென்னையின் சில இடங்களை குறிபிட்டு இவைகள் எல்லாம் வருகிற 06-06- 2023ஆம் நாளன்று கடலில் மூழ்கி விடும் எனவும், இப்பகுதியில் அந்த ஜமாத்தினர் (19குரூப்)யாரும் குடியிருந்தாலோ அல்லது சொந்தமாக நிலமிருந்தாலோ விற்றுவிட்டு சென்னை மாகாணத்திலிருந்து 500கிலோ மீட்டர் தொலைவில் குடியமர வேண்டும் என குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அப்படியே நம்பிய அந்த அதிரை தொழிலதிபர் இருக்கும் நிலங்களை எல்லாம்.அவசர அவசரமாக விற்றுவிட்டு தொழிலையும் காலி செய்து கொண்டு சட்டுமுட்டு சாமான்களை எல்லாம் அதிரையில் அள்ளிப் போட்டு விட்டும் அங்கிருந்து 500கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற கர்நாடக மாநிலத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்.

இதனிடையே அழியும் ஆண்டான 2023 உருண்டோடி தற்போது 2024ஆம் ஆண்டு நெருங்கி கொண்டிருக்கிறது.

ஜமாத் கொடுத்த ஃபத்வா பிரகாரம் எந்த சம்பவமும் சென்னையில் நடைபெறவில்லை மாறாக அந்த இடங்கள் எல்லாம் அசுர வளர்ச்சியடைந்து வணிக மையமாக விளங்கி வருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அதிரை நபர் தங்களின் ஜமாத்திடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.

இதற்கு 19அமைப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் விரக்தியடைந்த அந்த தொழில் அதிபர் இருப்பதை வைத்து கொண்டு சென்னையில் சிறிய அளவிலான தொழிலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தவ்ஹீத் கொள்கையுடைய ஒரு இமாமிடம் கேட்ட வகையில் அஹ்லே குர்ஆன் எனும் வழிகெட்ட கூட்டத்தினர் அவ்வப்போது மார்க்க தீர்ப்பு என்ற பெயரில் முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிடுவதும் அது பின்னர் பொய்த்து போவதும் வாடிக்கையானது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிதந்த மார்க்கம் மாசுகளற்ற மாணிக்கமாக தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என கொள்கையுடைய யூத கைகூலிகளின் இந்த அமைப்பினரை இனம் கண்டு கொள்ள வேண்டும். ப்ளே ஸ்டோர்களின் கிடைக்கும் இஸ்லாமிய செயலிகளில் பெரும்பான்மையான செயலிகள் யூதர்களுடையது என்றும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
spot_imgspot_imgspot_imgspot_img