Monday, December 1, 2025

பட்டுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் – ஆ. ராசா எம்பி சிறப்புரை!!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் என திமுகவினர் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மற்றும் பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டையில் அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை அருகில் நடைபெற்றது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா. அண்ணாதுரை MLA தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர கழக செயலாளர் S.R.N. செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். திமுக துணைப் பொதுச்செயலாளரும்நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

மேலும் திமுக மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் நா. அசோக்குமார் MLA, மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் பழஞ்சூர் கே. செல்வம் மற்றும் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img