Sunday, February 1, 2026

அதிரை இரயில் நிலையத்தில் மாபெரும் அறவழி போராட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

மீட்டர் கேஜ் ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்கவேண்டும் என அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் அஹ்மத் அலி ஜாஃபர் தலைமையில் அதிராம் பட்டினம் ரயில் நிலையத்தில் அறவழி போராட்டம் அறிவித்துள்ளது.

பாரம்பரிய மிக்க அதிராம் பட்டினம் ரயில் நிலையத்தில் அதிக வருவாய் ஈட்டிய பொழுதும், சென்னைக்கு செல்ல ரயில் நிறுத்தம் செய்யாத ரயில்வே இலாக்கா அதிகாரிகளை கண்டித்தும், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும். இவ்வழித்தடத்தில் இயக்கிட கோரியும், தாம்பரம்- செங்கோட்டை தாம்பரம் அதிவிரைவு ரயிலை அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வலியுறுத்தியும் மாபெரும் கண்டன அறவழி போரட்டம் நாளை 1/9/2023 நண்பகல் 1.30 மணியளவில் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெறும் என்று அதிரை நல்வாழ்வு பேரவை அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ரயில் பயணிகள் சங்கமும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img