Home » இலவச பட்டா வழங்கக்கோரி கழுதையிடம் மனு கொடுத்த 46 பேர் கைது; கோவில்பட்டியில் பரபரப்பு!

இலவச பட்டா வழங்கக்கோரி கழுதையிடம் மனு கொடுத்த 46 பேர் கைது; கோவில்பட்டியில் பரபரப்பு!

0 comment

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் குடியிருக்க இடம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பல முறை மனு அளித்தும், தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தற்போது வரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறுப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக தகுதியுள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Source -Asianetnewstamil

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter