Monday, December 1, 2025

அதிரை FM 90.4 மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு இணைந்து நடந்தும் நடைப்பயிற்சி விழிப்புணர்வு முகாம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் , அதிரை எஃப்.எம் 90.4 மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு இணைந்து நடத்தும் நடைப்பயிற்சி விழிப்புணர்வு முகாம்

அதிராம்பட்டினம் பகுதி மக்களின் உடல் நலன் கருதி அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகில் நடைப்பாதை இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது . அழகான குளம், அமைதியான இடம் குளக்கரையில் நிழல் தரும் பசுமையான மரங்கள், பூச்செடிகள், நடைப்பயிற்சி செய்ய ஃபேவர் பிளாக் சிமெண்ட் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், பெரியவர்களுக்கான எளிய உடற்பயிற்சி செய்யும் சாதனங்கள் ஆகியவனவும் அமைக்கப்பட்டுள்ளன.

காலையில் 4.30 மணிமுதல் 7.00மணி முடிய பெண்களுக்காவும் காலை 7.00மணி முதல் 9.00மணிமுதல் ஆண்களுக்காகவும் மீண்டும் மாலையில் 4.00மணி முதல் 6.30மணி முடிய ஆண்களுக்காகவும் நடைபயிற்சி செய்ய நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி செய்துவருகிறனர்.

தொடர்ந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் மூட்டுவலி, சர்க்கரைவியாதி, இரத்தகொதிப்பு(BP), முதுகுவலி போன்ற நோய்கள் குறைந்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக அனுபவங்களை கூறிவருகின்றார்கள்.

நடைப்பயிற்சியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருகிற 29.12.2017 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணி முடிய நலம் தரும் நடைப்பயிற்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகில் உள்ள நடைப்பாதையின் தென்பகுதியில் நடைபெறவுள்ளது.
கருத்தரங்கில் டாக்டர். A.அப்துல் ஹக்கீம் M.B.B.S.,DA.அவர்களும், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் கா.செய்யது அகமது கபீர் MA.,M.Phil.அவர்களும், பட்டுக்கோட்டை நடைபயிற்சியாளர்கள் மன்ற இணைச்செயலாளர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் திரு.D.ரவிச்சந்தர் MA.,MP.Ed.,PG Dip( in yoga) மற்றும் இயன்முறை மருத்துவர் D. செல்வசிதம்பரம் BPT M.Sc., (UK) ஆகியோர்கள் கலந்துகொண்டு இருதயநோய், சர்க்கரைநோய், உடற்பருமன், இரத்த கொதிப்பு மூட்டுவலி போன்ற நோய்களுக்கான தடுப்பு முறைகளையும் , நடைப்பயிற்சி செய்யும் முறை , நடைப்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் சிறப்பான தகவல்களை வழங்கவுள்ளனர்.

கருத்தரங்கில் கலந்துகொள்ள பெண்களுக்காக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற அனைவரையும் அதிரை எஃப்.எம் 90.4 மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் சார்பாக கேட்டுக்கொள்கிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img