Sunday, November 30, 2025

தஞ்சையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சையில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மேலும் இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் துறையில் கல்வி பயின்றவர்கள் பங்குபெறலாம்.

மேலும் விபரங்களுக்கு :- 04362-237037

இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img