Saturday, September 13, 2025

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிரை முத்தம்மாள் தெரு இளைஞர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவரும், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான டாக்டர். அம்பேத்கரின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளை நினைவு கூறும் விதமாக இன்று காலை முதல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமூகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக அதிரை முத்தம்மாள் தெரு இளைஞர்கள் ஜெயசூர்யா, திவாகர், திருமாயவன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வு குறித்து அவர்கள் கூறுகையில், தற்போதைய கால சூழ்நிலையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும், சட்டத்திட்டங்களையும் அனைத்து இளைஞர்களும் அறிந்து அவ்வழியில் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img