Wednesday, March 18, 2026

பிலால் நகர், MSM நகர் உள்ளிட்டவற்றை தனி ஊராட்சியாக உருவாக்குக – எம்எல்ஏ அண்ணாதுரையிடம் கோரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை, ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட எம்.எஸ்.எம். நகருக்கு இன்று வருகை புரிந்திருந்தார். அப்போது பிலால் நகர் முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் சார்பாக எம்எல்ஏ அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் பிலால் நகரில் ரோடு, வடிகால் வாய்க்கால்கள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியும், ஏரிப்புறக்கரை ஊராட்சியை தெற்கு, வடக்காக பிரித்து பிலால் நகர், ஆதம் நகர், எம்.எஸ்.எம் நகர், சவுக்குகொல்லை, சாணாவயல் ஆகியவற்றை தனி ஊராட்சியாக உருவாக்கி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் சக்தியிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஜமாஅத் தலைவர் முஹமது அமீன், செயலாளர் கமாலுதீன், துணை தலைவர் அலி அன்வர்தீன், துணை செயலாளர் முஹமது, நிஜாஸ் உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகளும், முஹல்லாவாசிகளும் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img