Wednesday, March 18, 2026

அதிரையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் நாளை தொடக்கம் – வார்டு வாரியாக முகாம்!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்ற பல திட்டங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில் அரசின் சேவைகள், விரைவாக, எளிதாக மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தவும், ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை நாளை 18ம் தேதி திங்கட்கிழமை கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை 18/12/2023 திங்கட்கிழமை ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் தொடங்கப்பட உள்ளது. அதிராம்பட்டினம் காவல் நிலையம் எதிரே உள்ள செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு வார்டுகள் வாரியாக முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் துறைகள் மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி வார்டுகளுக்கான முகாம் தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மக்களுடன் முதல்வர் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img