Wednesday, March 18, 2026

அதிரையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசாக அனைத்து வகை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000, ஒரு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இன்று 10ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் இன்று காலை முதல் தொடங்கியது.

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நியாயவிலைக்கடை எண் 5ல் நடைபெற்ற பொங்கல் பரிசு விநியோக நிகழ்வில் அதிராம்பட்டினம் நகரமன்றத்தலைவரின் கணவர் M.M.S. அப்துல் கரீம், நகரமன்ற துணைத்தலைவர் இராம. குணசேகரன், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் PGT. செய்யது முஹம்மது, 21வது வார்டு நகரமன்ற உறுப்பினர் அஹமது மன்சூர், 24வது வார்டு நகரமன்ற உறுப்பினர் அப்துல் மாலிக், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் PGT. முஹம்மது இஸ்மாயீல், M. நஸ்ருதீன் சாலிஹ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img