Sunday, February 1, 2026

அதிரையில் மத துவேச போஸ்டர்! போலீசில் மஜக புகார்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதி சிறுபான்மை இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

தற்பொழுது அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடம் சம்மந்தமாக அதிரை பொதுமக்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருவது தமிழகம் முழுவதும் பேசும்பொருளாக ஆனது.

இந்த போராட்டம் ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் சிறுபான்மை இஸ்லாமியர்களை குறிவைத்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு பக்கம் விளைவித்து மத கலவரத்தை உருவாக்கும் நோக்கில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் மீது அவதூறு குற்றச்சாட்டுடன் கூடிய போஸ்டரை சில கயவர்கள் ஒட்டி இருந்தனர்.

இச்சம்பவத்தை செய்து மத கலவரத்தை உண்டாக்க நினைக்கும் கயவர்களை உடனடியாக அறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் அதிரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் பைசல் அஹமத், மாவட்டஊடகப் பிரிவு செயலாளர் J.S.சாகுல் ஹமீது, நகர அவைத் தலைவர் ஹலீல் ரஹ்மான், நகரத் துணைச் செயலாளர் அஜ்மல், நகர துணைச் செயலாளர் ராவுத்தர், இளைஞரணி செயலாளர் ரியாஸ் ஆகியோர் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img