அதிராம்பட்டினத்தில் சமீப நாட்களாக அதிகரித்து வரும் சாலை விபத்துக்களால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன.
இளைஞர்கள் வாலிப முறுக்கா காரணமாக அதிக வேகத்துடன் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பாதசாரிகள் மீது நிலைத்தடுமாறி மோதி விடுகின்றனர்.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் பொருட்சேதமும் உடல் உறுப்புகள் சேதமும் நிச்சயமாகிறது. இதில் உச்ச கட்டமாக உயிர்பலிகளும் நடக்கத்தான் செய்கின்றன.
இதனை தடுக்கும் விதமாக சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி,இயக்க கூட்டமைப்பினர் சட்ட ரீதியிலான நடவடிக்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
இருந்த போதிலும் வரும் வெள்ளியன்று அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட அனைத்து ஜும்ஆக்களிலும் குத்பா பேரூரையில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரசங்கத்தை அமைத்து கொள்ள சுற்றறிக்கை விடப்பட்டு இருக்கிறது.
ஜும்ஆ பிரசங்கத்திலும், அறிவுறை கூறுங்கள்- ஜமாத்துகளுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் கடிதம்..!!
More like this
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...