பட்டுக்கோட்டை முஸ்லீம் தெருவில் இருக்கும் முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு இரண்டு அணிகளுக்கு நிர்வாகத்தில் பங்குபெற போட்டா போட்டி நிலவி வருகிறது. இதனால் பள்ளியின் வக்பு நிலங்களை பராமிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதுதவிர மராமத்து பணிகளும் மந்த கதியில் நடைபெறுவதால் தொழுகையாளிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதனை கருத்திற்கொண்டு பள்ளிவாசல் தெரு இஸ்லாமிய பொதுமக்கள் நிர்வாக தேர்தலை நடத்த வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
உயர்நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக வக்பு வாரியம் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடக்க இருக்கும் இந்த ஆர்பாட்டத்திற்கு இஸ்லாமிய மக்கள் அனைவரையும் அழைப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
More like this
அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...
தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...
அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...