Sunday, February 1, 2026

நிர்வாக சண்டையால் வெள்ளிகிழமை விடுமுறைக்கு NO ?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்வி குழுமம் MKN அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது.

நல்லெண்ணம் கொண்ட அன்றைய நமது முன்னோர்கள் இக்கல்வி கூடங்களை நிறுவி படித்த நல்ல சமூகத்தை உருவாக்கியதன் விளைவு இன்று உலகெங்கும் வியாப்பித்திருக்கிறோம். இந்த கல்வி நிறுவனங்களுக்கு என அசையா சொத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களை வக்பு அதிகாரத்தின் கீழ் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி நிர்வாகத் தேர்வை வக்பு வாரிய அதிகாரிகள் நடத்துவது வழக்கம்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை கடந்த சில மாதங்களாகவே வக்பு வாரியத்தின் நேரடி கண்கானிப்பில் இக்கல்வி நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்யிருக்கிறது. இதன் காரணமாக தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவந்த வாராந்திர விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைக்கு மாற்றாக ஞாயிறு விடுமுறை நாளாகி போனது.

தேர்வு காலங்களில் இது சகஜம் என்றாலும் தேர்வல்லாத நாட்களிலும் ஞாயிறுதான் விடுமுறை நாளாக உள்ளது.

இது கல்விக்காக வாரி கொடுத்த வள்ளல்களின் கனவை சிதைக்கும் செயலாக உள்ளது என அப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் கூறுகின்றனர். எனவே MKN ட்ரஸ்ட் குடும்ப நிர்வாகிகள் இவ்விடயத்தில் தலையிட்டு வழக்கம்போல் வெள்ளியன்று விடுமுறையை பெற்று தர மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img