Saturday, September 13, 2025

அதிரையில் ஆதரவற்றோர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் CBD தஞ்சை மாவட்டம் & மஹாசக்தி பெண்கள் தொண்டு அறக்கட்டளை..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ச்சியாக கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(23/02/24) கிரசண்ட் பிளட் டோனர்ஸ் தஞ்சை மாவட்டம்  மற்றும் மஹாசக்தி பெண்கள் தொண்டு அறக்கட்டளைன் ஒத்துழைப்போடு அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்று உடல்நிலை குன்றிய நிலையில் இருந்த முகமது யூசுப் என்ற நபரை மீட்டெடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் அவர் குணமடைந்து பிறகு அவரை காப்பகத்தில் சேர்த்து பராமரிகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக ஆதரவற்ற நிலையில் யாசகம் பெற்றுக் கொண்டிருக்கும் வயது முதிர்ந்தவர்களையும், மனவளர்ச்சி குன்றியோரையும் மீட்டெடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வுகள் மேற்கொண்டனர்.


இந்நிகழ்வின் போது CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேரா.செய்யது அகமது கபீர், மஹாசக்தி பெண்கள் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனர் சகோதரி.R.ஜெயலட்சுமி ரெத்தினம், CBDன் அதிரை நகர நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், பகுருதீன் ஆகியோர் களத்தில் சேவையாற்றியுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img