Wednesday, March 18, 2026

அதிரை வழியாக முத்துப்பேட்டை செல்லும் 12C வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டைக்கு 12A, 12B, 12C ஆகிய எண்களில் பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை செல்லும் 12C பழைய பேருந்து மாற்றப்பட்டு புதிதாக வாங்கப்பட்ட நீல நிற பேருந்து இத்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

அந்த வகையில் 12C புதிய நீல நிற பேருந்து சேவையின் துவக்கவிழா பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பேருந்து சேவையை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா. அண்ணாதுரை எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் பயணித்தார். இந்நிகழ்வில் அரசியல் கட்சியினர், போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி...

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img