Sunday, February 1, 2026

ஏப்ரல் 19, 26 தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வரும் ஏப்ரல் 19, 26 ஆகிய தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதேப்போல் ஏப்ரல் 26ம் தேதி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகள் முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் கட்டாய கூட்டு பிரார்த்தனை செய்யும் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையாகும். இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பூத் ஏஜெண்ட் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களின் பணியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

ஆகவே, ஒரு தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பு என்பதால், அனைத்து தரப்பு மக்களும் எளிமையான முறையில் வாக்குகளை செலுத்தும் வகையில் முதல் கட்ட (ஏப்ரல் 19) மற்றும் இரண்டாம் கட்ட (ஏப்ரல் 26) தேர்தல் தேதிகளை மாற்றி அமைக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img