அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.
இவர் மீது மதுபோதையில் வாகனத்தை மோதியதற்காக அதிராம்பட்டினம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த பாலகிருஷ்னன் வயது 20 என்பவர் கைது செய்யப்பட்டார்.
நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட பாலகிருஷ்ண்னுக்கு 7 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கினார்.
இதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். 7நாட்களுக்கு பின்னர் காவல்துறை கஸ்டடிக்கு மாற்றப்பட்டு விசாரனைக்கு உட்படுத்துவர் என தெரிய வருகிறது.
காவல்துறையின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியதோடு 18 வயதிற்கு கீழ் வாகனம் இயக்கும் பெற்றோர்கள் மீது கடும் தண்டனையை வழங்கிட வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.