கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம் தழுவிய அளவில் வழங்கி வருகிறது.
அதேபோல் உயிர்காக்கும் உன்னத பணிகளான சாலை விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் தன்னை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார்கள்.
அதன் வரிசையில் கடந்த சில மாதங்களாக அதிரை நகரில் சாலை விபத்துக்களால் உயிர் இழக்கும் சூழல்கள் உருவாகி வருவதை தடுக்கும் நோக்கில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதன் படி அதிரை நகரின் முக்கிய இடங்களில் சாலைத்தடுப்பு (பேரிகார்ட்) அமைத்து வருகிறார்கள்.
இன்று இரண்டு இடங்களில் அமைக்கப்பட்ட பேரிகார்டை உள்ளூர் காவல்துறை மற்றும் CBD நிர்வாகத்தினர் அமைத்தனர்.
இதில் CBDயின் மாவட்ட தலைவர் பேராசிரியர் கபீர் சார், 24வது கவுன்சிலரும் அதிரை நகர CBDயின் நிர்வாகியுமான அப்துல் மாலீக், நூர் முகம்மது, ஆரிஃப், பக்ருதின், TIYA மாலீக், முஸ்தாக் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
CBDயின் உயிர்காக்கும் இந்த உன்னத பணியினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்



