அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள் தொகையை கொண்டுள்ள இப்பகுதியில் காலி மனைகள் ஏராளமாக உள்ளது.
அதில் சில தனியாருக்கு சொந்தமன மனைகளில் புதர் மண்டி இருள் சூழ்ந்து காணப்படுவதோடு, மழைநீரூம் தேங்கி உள்ளது.
சமீபத்தில் பெய்த கன மழையினால் அப்பகுதியில் மழை நீர் தேங்கி இருக்கிறது, இது குறித்து ஊராட்சி தலைவர் சக்தியிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், கவுன்சிலர் தமீம் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேங்கியுள்ள மழை நீரில் விஷ ஜந்துக்கள் நடமாடி வருகிறது கொடிய விஷம் கொண்ட பாம்புகள் அவ்வப்போது தரைப்பகுதிகளில் தென்படுவதாகவும் இதனால் பள்ளிக்கூட விடுமுறையில் இருக்கும் பிள்ளைகளை வெளியில் சென்று விளையாட கூட அனுமதிக்க முடியவில்லை என ஆதங்கப்படுகிறார்கள்.
எனவே ஊராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை களைந்து தனியார் வீட்டு மனைகளில் தேங்கியுள்ள நீரை அகற்றுவதோடு சம்பந்தப்பட்ட மனை உரிமையாளர்களிடம் மனையை பராமரிக்க உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




