திருச்சி புதிய பன்னாட்டு விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பழைய முனையத்தில் இருந்து புதிய முனையத்தை செயல்படுத்த போதிய ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்து வந்தனர்.
முழுவதுமாக செயல் அலுவலகம்,விமானம் புறப்பாடு, தரையிறங்குதல் உள்ளிட்டவைகளுக்கு உண்டான பாதுகாப்பு நடைமுறைகளை விமான நிலைய அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர்.
அதன்படி 11-06-2024 அன்று காலை 6 மணி முதல் திருச்சி புதிய விமான நிலையம் முழு பயன்பாட்டிற்கு வருகிறது என விமான நிலைய அதிகாரி MMS. ஜஃபர் தெரிவிக்கிறார்.
மேலும், 11-06-2024 அன்று முதல் திருச்சி விமான நிலையம் வாயிலாக புறப்பாடு தரையிறங்குதல் ஆகியவைகள், புதிய முனையத்தில் இருந்தே செயல்படும் என ஜஃபர் தெரிவிக்கிறார்.
More like this
பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...
அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...