Sunday, February 1, 2026

அதிரையில் தொடங்கியது வெஸ்டர்ன் FC கால்பந்து தொடர்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று தொடங்கியது.

அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற முதலாம் நாள் ஆட்டத்தில் ராயல் FC அதிராம்பட்டினம் அணியினரும் தர்மபுரி FC தர்மபுரி அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தர்மபுரி FC தர்மபுரி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ராயல் FC அதிராம்பட்டினம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

முன்னதாக இன்று நடைபெற்ற போட்டி தொடரின் தொடக்க நிகழ்வில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள், முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நாளைய(19/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :

மன்னை FC vs AFC ஆலத்தூர்

இடம் : பெரிய மருதநாயகம் மைதானம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img