அதிராம்பட்டினத்தில் அண்ணாவின் பிறந்தநாள் விழா மேற்கு நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மேற்கு நகர திமுக சார்பில் முன்னாள் பேரரிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் மற்றும் திமுகவின் பவள விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்கு நகர அலுவலகத்தில் நகர செயலாளர் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவைத்தலைவர் உமர்தம்பி பாட்சா முகைதீன் மரைக்காயர் கட்சி கொடியேற்றினார்.
பின்னர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற திமுகவினர், பட்டுக்கோட்டை சாலை, சி.எம்.பி லைன், மேலத்தெரு, கீழத்தெரு, ஏழு கடை, செக்கடி தெரு, மார்க்கெட் சாலை ஆகிய நகரின் முக்கிய பகுதிகளில் அக்கட்சியின் முன்னோடிகளை வைத்து கொடியேற்றி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பொறுப்புக்குழு உறுப்பினர் முகம்மது யூசுப், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலஉரிமை பிரிவு தலைவர் ஜமாலுதீன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது, யாசின் அரஃபாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.